எங்கள் நீர், அவுட் எதிர்காலம், பாதுகாக்க எங்களுடையது

நீர் மற்றும் சுகாதாரம்

மொத்தம்

Rs. 2,000,000

அவசியம்

அபிவிருத்தி முன்னேற்றம்

0

% நிதி

ரூ.

0

திரட்டப்பட்டுள்ள பெறுமதி

0

% நிறைவடைந்தது

நன்கொடை செலுத்துங்கள்

தெஹினூரி தமிழ் வித்தியாலயத்தின் பிள்ளைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க எமக்கு உதவுங்கள்.

கிடைக்கும் முறைகள்

Dialog மூலமாக

வங்கிப் பரிமாற்றம்

தற்போது நன்கொடை செய்ய

பல்வேறு பணக்கொடுப்பனவு முறைகளிலிருந்து உங்களுக்கேற்ற முறையைத் தெரிவுசெய்து மேற்கொள்ளக்கூடிய மக்கள் சக்திக்கான நன்கொடையானது மிகவும் பத்திரமானது, பாதுகாப்பானது மற்றும் இலகுவானதுமாகும்.

திட்டம் முழுமையாக நிதி. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!

திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!

விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

சுருக்கம்

தெஹினூரி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு 2000,000 ரூபா செலவில் நீரினால் பரவும் நோய்களைப் போக்குவதற்கு தடையற்ற சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும்.

சவால்

தெரனியகலவில் வசிக்கும் பிள்ளைகளுக்கு இந்த ஒரே ஒரு பாடசாலை மாத்திரமே உள்ளது. என்றபோதிலும் இது  12km தொலைவிலுள்ளது.  இப்பகுதியில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு விவசாயமே முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது. இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்களாகவும் வறுமையான குடும்ப சூழ்நிலைகளிலிருப்பவர்களாகக் காணப்படுகின்றனர். இப்பகுதி குழந்தைகள் ஏற்கனவே கனமாக இருக்கும் புத்தகப்பைகளில் தண்ணீரும் எடுத்துச் செல்லவேண்டும், ஆனால் அந்நாளுக்கான பாடசாலை வேளை முடிவதற்குள் எடுத்துச்சென்ற  தண்ணீர் தீர்ந்துபோய்விடும். அப்பள்ளிக்கு அருகில் குழாய்க்கிணறொன்று உள்ளது. ஆனால், கோடைகாலத்தில் இதில் தண்ணீர் வருவதில்லை. மேலும் தற்போது, சரியான பராமரிப்பு இல்லாததால், இக்குழாய்க்கிணறு பழுதடைந்து போயுள்ளது. எனவே குழந்தைகள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கிவருகின்றனர்.

தீர்வு 

நிலத்தை ஆய்வு செய்த மக்கள் சக்தி பொறியாளர்கள், தற்போதுள்ள குழாய்க்கிணற்றை சீரமைக்க முடிவு செய்துள்ளனர். இந்தத் திட்டம் அரசு பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் சேமிப்பு மற்றும் விநியோக அமைப்புடன் இணைக்கப்பட்ட மோட்டார் ஒன்றும் அமைக்கப்படும்.<br>இது குழந்தைகள் தடையின்றி சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் சுகாதாரமான கல்விச் சுற்றுச்சூழலைப் பெற்றுக்கொள்வதோடு முறையான சுகாதார பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவர்.  பாடசாலையும் தொடர்ந்து மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும்.

மேலதிக செயற்றிட்டங்கள்

அனைத்தையும் ஆராயுங்கள்

எம்மோடு இணைந்து தன்னார்வத்தொண்டாற்றுங்கள்

எங்கள் பங்காளர் ஆகுங்கள்