வி-ஃபோர்ஸ் உடன் தன்னார்வ

இளைஞர்களை நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி சிந்திக்க வைக்கவும், தகுதியான காரணத்திற்காக தன்னார்வத் தொண்டு செய்யவும் ஒரு தளத்தை வழங்கும் நோக்கத்துடன் மக்கள் சக்தி V-Force தொடங்கப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து வரும் தன்னார்வலர்களைக் கொண்ட V-Force அணியானது, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியுடன் திட்டமிட்ட இடங்களுக்கு பயணப்படும்.

அரசாங்கத்தால் கூட அடைய முடியாத வலுவானதும் ஒத்திசைவானதுமோர் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப தன்னார்வத்தொண்டு முக்கியமான பங்களிப்பை வழங்கக்கூடியது என்பதை News 1st அடையாளம் கண்டுள்ளது. எனவே, தன்னார்வத்தொண்டை குடியுரிமையின் அத்தியாவசியச் செயலாகவும், சமூக விலக்கை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழியாகவும் சமூக மேம்பாட்டிற்கு சுய உதவியை ஊக்குவிப்பதற்கும் V-Force வழிவகுத்துள்ளது. இது மிக அடிப்படையானது - சக மனிதருக்கு உதவும் தன்மை, அச்செயல்பாட்டின்போது ஒருவருக்கொருவர் உதவுதல், பகிர்தல், பரோபகாரம் ஆகியவை பண்டைய இலங்கையரின் வாழ்க்கை நெறிமுறைகளாகும்.

தனிநபர்களாக தன்னார்வத் தொண்டு

V-Force செயற்றிட்டங்கள் பங்கேற்பாளர்களுக்கு முழுநாள் சேவை, கற்றல், மற்றும் வாழ்நாள் நட்பை உருவாக்கும் வாய்ப்பையும் வழங்குகின்றது. V-Force செயற்றிட்டங்கள் ஒரு நாள் திட்டங்களாகும், இதில் தன்னார்வலர்கள் திட்டமிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் தத்தமது பங்களிப்பைச் செய்ய வாய்ப்பளிக்கப்படுகின்றனர்.


இப்போதே இணையுங்கள்

குழுவாக தன்னார்வத்தொண்டில் ஈடுபடுங்கள்

V-Force அணிகள் நாட்டின் இளைஞர்களை தங்கள் சொந்த கிராமங்களுக்குள் மாற்றம் கொண்டுவரும் முகவர்களாக அணிதிரட்டும் முயற்சியாகும் . ஒவ்வொரு கிராம அணியும் அந்த கிராமத்திற்குத் தேவையான பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொள்வதுடன், பிற சமூகங்களை உள்ளடக்கிய சிறப்புச் செயற்றிட்டங்களிலும் பங்கேற்கிறது.

மாணவர்கள் தன்னார்வத்தொண்டில் ஈடுபடுவதையும் அவர்கள் மத்தியில் சேவை குறித்தான புரிதலை ஏற்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது. V-Force Corporate அணிகள் தன்னார்வ அடிப்படையில், சமூகத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் பங்குபெறும் ஊழியர்களின் குழுவாகும்.

குழுவாக இணையுங்கள்