COLOMBO (News 1st) – நாட்டின் கிராமப்புற சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட கம்மடா வீடு வீடாக மக்கள் பிரச்சாரத்தின் 06வது கட்டத்தின் 4வது நாள் இன்று.
யாழ்ப்பாணம், மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கம்மடா குழுவினர் விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தேடவுள்ளனர்.
கம்மடா வீடு வீடாகச் செல்லும் பிரச்சாரம் பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.