செல்ல கதிர்காமம் வாசிகளுக்கு சுத்தமான நீர்

மொனராகலை மாவட்டத்தின் கதிர்காம பிரதேச செயலகத்திற்குட்பட்ட செல்லகதரகம கிராம சேவகர் பிரிவிலுள்ள கொஹம்படிகன கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றன.


அவர்கள் விவசாயத்திலிருந்தும் கதிர்காமத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் நாளாந்த வருமானத்திலிருந்தும் பிழைப்பு நடத்துகின்றனர்.


அவர்களின் முக்கிய பிரச்சினை சுத்தமான குடிநீர் இல்லாததுதான்.


சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள செல்லகதரகம பாடசாலையின் நீர் வடிகட்டும் முறைமையிலிருந்து குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.  இருப்பினும், கிராமம் காட்டு யானைகளால் அச்சுறுத்தப்படுகிறது, இதனால் மாலை நேரங்களில் தண்ணீர் கொண்டு வருவது கடினம்.


இக்கிராமத்தில் சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைக்காக மாத்தறை மாவட்ட வைத்தியசாலைக்கு செல்கின்றனர்.


காலஞ்சென்ற திரு.பெலிக்ஸ் ஆர்.டி சொய்சா அவர்களின் நினைவாக கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடனும் திருமதி காந்தி வெட்டமுனி மற்றும் திருமதி குமுதுனி டி சொய்சா அபேசிறிவர்தன ஆகியோரின் நிதி உதவியுடனும் இந்த கருத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இத்திட்டம் 2022 ஆகஸ்ட் 31 ஆம் திகதியன்று பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எம்மோடு இணைந்து தன்னார்வத்தொண்டாற்றுங்கள்

எங்கள் பங்காளர் ஆகுங்கள்