ஹெங்கமுவவிற்கு சுத்தமான நீர்

ஹெங்கமுவ கிராமத்தில் பல விவசாயிகள் வாழ்கின்றனர். அவர்களின் விவசாயத் தேவைகளுக்கான ஒரே நீர் ஆதாரம் அம்பகாகா அணைக்கட்டு மட்டுமே. அவர்களிடம் சுத்தமான குடிநீருக்கான ஆதாரம் இல்லை, அதற்காக அவர்கள் தண்ணீர் எடுப்பதற்காக பல கிலோமீட்டர் மலையேற்றம் செய்ய வேண்டியிருந்தது.

அவர்களின் நீர் வழங்கல் பாழடைந்த மற்றும் மாசுபட்ட நிலையில் இருந்ததால், இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்கு தண்ணீர் பெற பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. இந்த தேவை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க அவர்கள் நடவடிக்கை எடுத்தனர், ஆனால், அவர்களின் கோரிக்கை கேட்கப்படவில்லை.

தங்கள் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பொதுக் கிணறு மற்றும் நீர் விநியோக வலையமைப்போடு தங்கள் நீர் விநியோக அமைப்பை புதுப்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

அவர்களின் வேண்டுகோளை காமத்த விசாரித்த பின்னர், ஹெங்கமுவ கிராமவாசிகள் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

எம்மோடு இணைந்து தன்னார்வத்தொண்டாற்றுங்கள்

எங்கள் பங்காளர் ஆகுங்கள்