கடுறுபிட்டி யில் வசிப்பவர்களுக்கு சுத்தமான குடிநீர்

அநுராதபுரம் மாவட்டத்தின் மகாவிளச்சிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட கதுருப்பிட்டிய கிராமத்தில் 108 குடும்பங்கள் கடுமையான குடிநீர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றன.


அவர்களுக்கு நிரந்தரமான வருமான ஆதாரம் இல்லை, மேலும் அவர்களின் முக்கிய வாழ்வாதாரம் மானாவாரி விவசாயம் ஆகும்.


கிராமத்தில் சுமார் 40 சிறுநீரக நோயாளிகள். சுத்தமான தண்ணீரைப் பெற அவர்கள் 3 முதல் 4 கி.மீ பயணிக்க வேண்டும்.


மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 95/96 மின் பொறியியலாளர்கள் குழுவினால் இந்த நிதி பங்களிப்புச் செய்யப்பட்டுள்ளது.


இலங்கை கடற்படையிடமிருந்து தொழில்நுட்ப உதவி பெறப்பட்டது.


கோவிட் 19 சுகாதார அறிவுறுத்தல்களுக்கு இணங்க செப்டம்பர் 10 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் இத்திட்டம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

எம்மோடு இணைந்து தன்னார்வத்தொண்டாற்றுங்கள்

எங்கள் பங்காளர் ஆகுங்கள்