பல மாதங்களாக சரியான வீடு இல்லாமல் தவித்த ஒரு குடும்பத்திற்கு கம்மடா புதிய நம்பிக்கையை அளித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி, ஹாலி எலாவில் உள்ள சந்திமா நெலும் குமாரியின் குடும்பத்தின் அவல நிலையை கம்மடா வெளிப்படுத்தினார். இந்தப் பெண், அவரது மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களின் பாட்டிக்கு வாழ ஒரு நல்ல வீடு இல்லாத கதை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
அதன்பிறகு, கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தக் குடும்பத்திற்கு ஒரு புதிய வீட்டை வழங்க ASP லாஜிஸ்டிக்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் முன்வந்தது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கம்மடாவுடன் கைகோர்த்த உங்களால்தான் , இது போன்ற குடும்பங்கள் இறுதியாக தங்கள் சொந்தக் காலில் நிற்க முடிகிறது.
சில மாதங்களில் புதிய வீட்டின் வசதியை அனுபவிக்கப் போகும் சந்திமா நெலும் குமாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க முன்வந்ததற்காக இந்தப் பெருமைமிக்க தேசத்தின் கருணை உள்ளம் கொண்ட மக்கள்தான் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.
கம்மடா. மக்களுக்காக. மக்களால்.